நாய் கடித்தால் உரிமையாளருக்கு சிறை! டேராடூனில் செல்லப்பிராணிகள் வளர்ப்பில் அதிரடி சட்டங்கள் அமல்

நாய் கடித்தால் உரிமையாளருக்கு சிறை! டேராடூனில் செல்லப்பிராணிகள் வளர்ப்பில் அதிரடி சட்டங்கள் அமல்

டேராடூன் மாநகராட்சி ‘நாய் உரிமத் துணைவிதிகள்-2025’ என்ற புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இனி செல்ல நாய்கள் யாரையாவது கடித்தால், அதன் உரிமையாளர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும். பிட்புல் மற்றும் ராட்வீலர் போன்ற ஆக்ரோஷமான இனங்களுக்கு உரிமம் பெறுவதுடன் கருத்தடை சான்றிதழ் சமர்ப்பிப்பதும் இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் நாய்கள் அசுத்தம் செய்தாலோ அல்லது இரவில் தொடர்ந்து குரைத்து தொல்லை கொடுத்தாலோ உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சாதாரண நாய்களுக்கு 500 ரூபாயும், ஆக்ரோஷமான இனங்களுக்கு 2,000 ரூபாயும் பதிவு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை பாஜக வரவேற்றுள்ள நிலையில், தெருநாய்கள் தொல்லையை மாநகராட்சி கவனிக்கவில்லை என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *