பாகிஸ்தான் ராணுவத்தின் மீது பிஎல்ஏ தாக்குதல் 12 வீரர்கள் உயிரிழப்பு
December 17, 2025

பலூச் விடுதலை இராணுவம் (BLA) குவெட்டா மற்றும் பஞ்ச்கூர் உட்பட பல பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவத்தின் மீது நடத்திய தாக்குதலில் 12 வீரர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த மோதலில் பிஎல்ஏ அமைப்பின் 3 தளபதிகளும் உயிரிழந்தனர். பஞ்ச்கூரில் அரசு கட்டிடங்களைக் கைப்பற்றியதுடன், ரெகோ டிக் திட்ட வாகன அணிவகுப்பின் மீதும் இந்த அமைப்பு தாக்குதல் நடத்தியுள்ளது.
ராணுவத்திற்கு உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனங்களை பிஎல்ஏ படையினர் புலேடா பகுதியில் சிறைபிடித்தனர். பாகிஸ்தான் படைகளுக்கு உதவுபவர்கள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. இந்தத் தாக்குதல்களின் போது ஏராளமான ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.