பாஜகவினரை பீகாரைத் தாண்டி யூபியில் வீசுவோம் என கல்யாண் பானர்ஜி ஆவேசம்

மக்களவையில் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த விவாதத்தின் போது, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி பாஜகவினரை பீகாரைத் தாண்டி உத்தரப்பிரதேசத்தில் விழும்படி வீசுவேன் என்று எச்சரித்தார். பாஜகவினரின் குறுக்கீடுகளால் ஆவேசமடைந்த அவர், நாட்டின் எதிர்காலம் முக்கியமானது என்றும், நீதித்துறையின் மீதான நம்பிக்கையைப் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பெண்கள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குவது ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் என்று கூறிய அவர், தேர்தல் ஆணையம் மூலம் யார் வாக்காளர் என்பதை பிரதமரே தீர்மானிக்க முயல்வதாகக் குற்றம் சாட்டினார். மேலும், தேர்தல் பணியின் போது பி.எல்.ஓ-க்கள் உயிரிழந்ததற்கு தேர்தல் ஆணையமே பொறுப்பு என்று கூறிய அவர், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்த உயிரிழப்புகள் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பினார்.