பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய குடிமக்கள் விருது வழங்கி கௌரவம்

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய குடிமக்கள் விருது வழங்கி கௌரவம்

எத்தியோப்பியா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் மிக உயரிய விருதான ‘தி கிரேட் ஹானர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா’ வழங்கப்பட்டது. இருநாட்டு உறவுகளை மேம்படுத்தியதற்காக பிரதமர் டாக்டர் அபி அகமது அலி இந்த கௌரவத்தை வழங்கினார். இந்த உயரிய விருதைப் பெறும் முதல் உலகத் தலைவர் என்ற பெருமையை பிரதமர் மோடி இதன் மூலம் பெற்றுள்ளார்.

இந்த கௌரவத்தை 140 கோடி இந்தியர்களுக்கும் சமர்ப்பிப்பதாகக் கூறிய பிரதமர், எத்தியோப்பியா மக்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். எத்தியோப்பியாவின் வளர்ச்சிக்கு இந்திய ஆசிரியர்கள் ஆற்றி வரும் பங்களிப்பையும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான நட்புறவைப் பறைசாற்றுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *