கொலை செய்துவிட்டு தப்பிக்க முடியாது பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கடும் எச்சரிக்கை
December 16, 2025

மொஹாலியில் கபடி வீரர் ராணா பலாசூரியா சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, குற்றவாளிகளுக்கு முதல்வர் பகவந்த் மான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு நிம்மதியாக உறங்கிவிடலாம் என்று நினைப்பவர்கள் மிகப்பெரிய தவறு செய்கிறார்கள் என்றும், மாநிலத்தில் பயங்கரவாதத்தை பரப்ப எவருக்கும் அனுமதி இல்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இந்தக் கொலை வழக்கில் வெளிநாட்டுத் தொடர்புள்ள மூன்று குற்றவாளிகளைப் போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். முந்தைய ஆட்சிக் காலங்களில் வளர்ந்த இந்த ரவுடி கும்பல் கலாச்சாரத்தை வேரோடு அறுக்க அரசு உறுதியாக உள்ளது. பள்ளிகளுக்கு வரும் மிரட்டல் அழைப்புகள் குறித்தும், வன்முறையைத் தூண்டும் பாடல்கள் குறித்தும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதி அளித்துள்ளார்.