சொத்துக்காக பெற்றோரைக் கொன்று மூட்டையில் கட்டி ஆற்றில் வீசிய மகன்
December 17, 2025

உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரில் சொத்து தகராறு காரணமாக வயதான பெற்றோரைக் கொலை செய்த மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட அம்பேஷ், தனது தந்தை ஷியாம் பகதூர் மற்றும் தாய் பபிதாவை கொன்று, அவர்களின் உடல்களை மூட்டையில் கட்டி ஆற்றில் வீசியுள்ளார். பெற்றோரைக் காணவில்லை என மகள் அளித்த புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த அதிர்ச்சி உண்மை வெளிவந்தது.
கடந்த டிசம்பர் 8-ம் தேதி இந்த கொடூரக் கொலை நடந்துள்ளது. காவல்துறையினரின் விசாரணையில் அம்பேஷ் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். தற்போது ஆற்றில் வீசப்பட்ட உடல்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பணத்தாசைக்காக ஒரு மகனே பெற்றோரைக் கொன்ற இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.