மெஸ்ஸியின் கால் காப்பீட்டு பிரீமியம் இத்தனை கோடிகளா
December 16, 2025

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தனது கால்களுக்கு சுமார் 8,100 கோடி ரூபாய் மதிப்பிலான காப்பீடு செய்துள்ளார். பொதுவாக விளையாட்டு வீரர்களுக்கான காப்பீட்டு பிரீமியம் மொத்த மதிப்பில் 0.8 முதல் 2 சதவீதம் வரை இருக்கும். அந்த வகையில் மெஸ்ஸியின் ஆண்டு பிரீமியம் தொகை மலைக்க வைக்கிறது.
குறைந்தபட்சம் 1 சதவீத கணக்கீட்டின்படி மெஸ்ஸி ஆண்டுக்கு 81 கோடி ரூபாய் பிரீமியம் செலுத்துகிறார். ஆனால் காயங்கள் மற்றும் அபாய அளவு அதிகரித்தால் இந்தத் தொகை 135 கோடி ரூபாய் வரை உயரும் வாய்ப்புள்ளது. இது விளையாட்டு உலகில் மிகப்பெரிய தொகையாகக் கருதப்படுகிறது.