இறகு முளைத்த பின் ஏன் ஆண் எறும்புகள் இறக்கின்றன? ஆச்சரியப்படுத்தும் உண்மை
December 15, 2025

இனப்பெருக்கம் செய்யக்கூடிய ஆண் மற்றும் ராணி (பெண்) எறும்புகளுக்கு மட்டுமே இறகுகள் முளைக்கின்றன. இவை வேறு காலனிகளுக்குப் பறந்து சென்று இனப்பெருக்கம் செய்ய உதவுகின்றன. இனப்பெருக்கத்திற்குப் பிறகு ராணி எறும்புகள் தங்கள் இறகுகளை உதிர்த்துவிடுகின்றன, ஆனால் ஆண் எறும்புகளுக்கு முடிவு வேறு. அவை இறந்துவிடுகின்றன.
ஆய்வாளர்களின் கூற்றுப்படி, பறப்பதற்குத் தேவையான ‘பறக்கும் தசைகளுக்காக’ ஆண் எறும்புகள் தங்கள் சக்தியை முழுமையாக செலவிடுகின்றன. இதனால், அவற்றின் செரிமான அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடுகிறது. இனப்பெருக்கம் வெற்றிகரமாக முடிந்த பிறகு, உயிர்ச்சத்து குறைவதால் ஆண் எறும்புகளின் ஆயுட்காலம் குறுகிவிடுகிறது.