டெல்லியில் அவசர நிலை! மாசு காரணமாக பள்ளிகள் மூடல்; ஆன்லைனில் வகுப்புகள்

டெல்லியில் அவசர நிலை! மாசு காரணமாக பள்ளிகள் மூடல்; ஆன்லைனில் வகுப்புகள்

தலைநகர் டெல்லி தேசியப் பிராந்தியத்தில் (NCR) காற்று மாசு அபாயகரமான அளவை எட்டியதால், பல பகுதிகளில் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. குழந்தைகளின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, நொய்டா மற்றும் காஜியாபாத்தில் ஐந்தாம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், வகுப்புகள் முழுமையாக ஆன்லைன் முறையில் நடைபெறும்.

டெல்லியில், பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளைத் தவிர மற்ற வகுப்புகளுக்கு நேரடி மற்றும் ஆன்லைன் (Hybrid Mode) முறையில் வகுப்புகள் தொடரும். மாசுவின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க, பள்ளி செல்லும் மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து செல்லுமாறு தொடர்புடைய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *