ஹாலிவுட் இயக்குனர் ராப் ரெயினர் மற்றும் மனைவி மர்ம மரணம்: கொலை வழக்காக விசாரணை ஏன்?
December 15, 2025

பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குனருமான ராப் ரெயினர் (78) மற்றும் அவரது மனைவி மைக்கேல் சிங்கர் ரெயினர் (68) ஆகியோர் லாஸ் ஏஞ்சல்ஸின் ப்ரென்ட்வுட்டில் உள்ள அவர்களது இல்லத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை மதியம் மருத்துவ உதவி அழைப்பின் பேரில் சென்ற தீயணைப்பு வீரர்கள், இருவரையும் வீட்டிற்குள் இறந்த நிலையில் கண்டனர்.
சட்ட அமலாக்கத் துறை வட்டாரங்கள், உயிரிழந்த இருவரின் உடலிலும் கத்தியால் ஏற்பட்ட காயங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கின்றன. இதையடுத்து, லாஸ் ஏஞ்சல்ஸ் போலீஸ் துறையின் கொள்ளை-கொலைப் பிரிவு (Robbery-Homicide Division) களமிறங்கி, இது ஒரு “சாத்தியமான கொலை” வழக்காக விசாரித்து வருகிறது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.