கொலஸ்ட்ராலைக் குறைக்க பூண்டு உண்மையிலேயே உதவுமா? தினமும் எவ்வளவு சாப்பிடலாம்: கார்டியாலஜிஸ்ட் தகவல்

மோசமான கொலஸ்ட்ராலைக் (Bad Cholesterol) குறைக்க பூண்டு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதய ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த உடல் நலனுக்கான பூண்டின் நன்மைகள் பற்றி ரைடம் குழுமத்தின் தலைமை கார்டியாலஜிஸ்ட் டாக்டர் நிரவ் பாலானி ஒரு போட்காஸ்டில் விளக்கினார். பூண்டில் உள்ள ‘அல்லிசின்’ (Allicin) என்ற கலவை கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது என்றார்.
டாக்டர் பாலானி, ஒரு நாளைக்கு 1 முதல் 2 பல் பூண்டு உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு போதுமானது என்று பரிந்துரைத்தார். இதை வெதுவெதுப்பான நீருடன் அல்லது சட்னியாகவோ, உணவில் சேர்த்தோ சாப்பிடலாம். எனினும், அதிகப்படியான பூண்டு இரைப்பை எரிச்சல், நெஞ்செரிச்சல், குமட்டல் அல்லது வயிற்று உபாதைகளை ஏற்படுத்தலாம். அதனால், மருத்துவரின் ஆலோசனையின்றி அதிக அளவு பூண்டு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.