லஷ்கர் தீவிரவாதியின் வெளிப்படையான மிரட்டல்! பாகிஸ்தானின் இரட்டை வேடம் அம்பலம்

அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தைபாவின் (LeT) பயங்கரவாதி அப்துல் ரவூஃப், காஷ்மீர் மற்றும் இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளார். ஹஃபீஸ் சயீதின் நெருங்கிய கூட்டாளியான இவர், ஒரு வீடியோவில், காஷ்மீர் ‘போர்’ இன்னும் முடிவடையவில்லை என்றும், டெல்லியைக் கைப்பற்றி அதனை ‘மணமகள்’ ஆக்குவதே இலக்கு என்றும் கூறியுள்ளார். இது இந்தியாவில் பயங்கரவாதத்தை மேலும் தூண்டும் முயற்சி எனக் கருதப்படுகிறது.
‘ஆபரேஷன் சிந்துர்’ நடந்தபோது பாகிஸ்தான் இராணுவத்தால் ‘பொதுமக்கள்’ என்று கூறப்பட்ட அப்துல் ரவூஃபின் இந்த புதிய வீடியோ, இஸ்லாமாபாத்தின் கூற்றுக்களின் நம்பகத்தன்மையை மீண்டும் கேள்விக்குள்ளாக்குகிறது. லஷ்கர் பயங்கரவாதியின் இந்த வெளிப்படையான மிரட்டல், பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு தனது மண்ணில் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிப்பதை உறுதிப்படுத்துகிறது.