5 லட்சம் கான்ட்ராக்ட் கில்லிங்! மகனைக் கொன்ற பாஜக தலைவர் தந்தை: பின்னணி என்ன?

மத்தியப் பிரதேச மாநிலம் மாண்ட்சூரில் நடந்த பாஜக தலைவர் ஷியாம்லால் தாக்கரின் கொலை வழக்கு 5 மாதங்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது. இந்த வழக்கில், அவரது சொந்த தந்தையே, 5 லட்சம் ரூபாய் சுபாரி கொடுத்து மகனைக் கொலை செய்ய ஏற்பாடு செய்தது தெரியவந்துள்ளது. சொத்து தகராறு, ஒரு பெண்ணுடனான மகனின் ‘தொடர்பு’ மற்றும் ஒரு தனிப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் பரவி, குடும்பத்தின் கௌரவம் கெட்டுவிடும் என்ற அச்சத்தின் காரணமாகவே, தந்தை தௌலத்ராம் தாக்கர் இந்த கொடூர முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
ஜூலை 18 அன்று ஹிங்கோரியா படா கிராமத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஷியாம்லால் தாக்கரின் உடலைக் கைப்பற்றியது நஹர்கர் காவல் நிலையத்தின் போலீசார். நீண்ட கால விசாரணையில், தொழில்நுட்ப ஆய்வு, சிசிடிவி காட்சிகள் மற்றும் ரகசியத் தகவல்கள் மூலம், போலீசார், கொலையுண்டவரின் தந்தை தௌலத்ராம் தாக்கர் உட்பட மொத்தம் ஐந்து பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.