தேனுக்காகத் துணிச்சலான சாகசம்! பாதுகாப்பு இல்லாமல் தேன்கூட்டில் கைவிட்ட பழங்குடி

பாதுகாப்புக் கருவிகள் எதுவுமின்றி, அடர்ந்த தேன்கூட்டில் நேரடியாகக் கைவிட்டு தேன் எடுக்கும் பழங்குடியினரின் அதிர்ச்சியூட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. பொதுவாக, ஒரு தேனீயின் கொட்டுக்கே மக்கள் பயப்படும் நிலையில், இந்த ஆபத்தான முறையானது தேனைச் சேகரிக்கும் பழங்குடி உறுப்பினரின் துணிச்சலைக் காட்சிப்படுத்துகிறது.
சுமார் 15 வினாடிகள் ஓடும் இந்தக் காணொளியில், தேனீக்கள் மொய்த்துக்கொண்டிருந்தும், கொட்டிக்கொண்டிருந்தும் கூட, அச்சமின்றி மரத்தின் உடற்பகுதியில் இருந்து ஒருவர் தேனை எடுப்பது தெளிவாகத் தெரிகிறது. ‘@niyo17417’ என்ற ஐடி மூலம் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பகிரப்பட்ட இந்தக் காணொளியை ஆயிரக்கணக்கானோர் பார்த்துள்ளனர். அனுபவமும் பாதுகாப்பும் இல்லாமல் இதைச் செய்வது ஆபத்தானது என்று பல பயனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
For Honey? I can't do this pic.twitter.com/GdzbgQ9hGF
— CASSIEN (@niyo17417) December 11, 2025