மென்மையான சப்பாத்திக்கு இந்த 4 தவறுகளைத் தவிர்க்கவும்! சமையலறையில் ஒரு ஈஸி டிப்ஸ்

இந்திய வீடுகளில் தினசரி உணவின் ஒரு பகுதியாக மென்மையான சப்பாத்தி இருந்தாலும், அதைத் தயாரிப்பது சிலருக்கு சவாலானது. நீங்கள் விரும்பும் மிருதுவான சப்பாத்தியைப் பெற, மாவில் தண்ணீர் சேர்க்கும் விகிதம் மற்றும் மாவு பிசையும் நேரம் மிகவும் முக்கியம். குறைந்த அளவு தண்ணீர் மாவை உலர வைக்கும், அதிக அளவு ஒட்டும் தன்மையை ஏற்படுத்தும். சப்பாத்தி கூடுதல் மென்மையாக இருக்க, தண்ணீர் பதிலாக வெதுவெதுப்பான பாலை பயன்படுத்தலாம்.
மாவு பிசைந்த பிறகு, சப்பாத்தி சுடுவதற்கு முன், குறைந்தது 20 முதல் 30 நிமிடங்கள் ஈரம் நிறைந்த துணி அல்லது மூடியால் மூடி வைக்க வேண்டும். இது நீண்ட நேரம் சப்பாத்தியை மென்மையாக வைத்திருக்க உதவுகிறது. சப்பாத்தி சுடும்போது தவாவின் வெப்பநிலை சரியாக இருக்க வேண்டும். அதிக சூட்டில் சுட்டால் சப்பாத்தி கெட்டியாகிவிடும். சில துளிகள் தண்ணீரைத் தவாவில் தெளிப்பதன் மூலம் சரியான வெப்பநிலையை சோதிக்கலாம். சப்பாத்தியைச் சுட்ட பிறகு, சூடான பாத்திரத்தில் ஒரு துணியால் மூடி வைத்தால் அதன் மென்மைத் தன்மை நீண்ட நேரம் பாதுகாக்கப்படும்.