மனித வாஷிங் மெஷின் அறிமுகம்! நீங்கள் குளிக்கச் செலவிடுவது எவ்வளவு தெரியுமா?

வாஷிங் மெஷின் இன்று அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்தக் கவலையை நீக்கும் வகையில், ஜப்பான் நிறுவனம் ஒன்று ‘மிராய் நிஞ்ஜென் சென்டக்குகீ’ (Mirai Ninjen Sentakuki) அல்லது ‘மனித வாஷிங் மெஷின்’ என்ற ஒரு புதுமையான கருவியைக் கொண்டு வந்துள்ளது. முழுமையாக செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் இந்தக் கருவி இப்போது பொதுச் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த இயந்திரம் துணிகளை மட்டுமல்ல, பயனரையும் குளிக்க வைக்கும். உள்ளே நுழைந்தவுடன், AI தோல் வகைக்கு ஏற்ப சோப்பு மற்றும் மசாஜை தானாகவே தேர்வு செய்யும். பின்னர், இது வெதுவெதுப்பான நீரில் ஷாம்பு மற்றும் குமிழ்கள் மூலம் குளியல் செயல்முறையை நிறைவு செய்கிறது. மேலும், இது குளித்த பிறகு தோல் வகைக்கு ஏற்ற மாய்ஸ்சரைசரையும் வழங்குகிறது. முதல் யூனிட்டை ஒசாகா ஹோட்டல் வாங்குகிறது. இந்த அதிசய இயந்திரத்தின் விலை தோராயமாக ₹3.2 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.