சுவரில் லிப்ஸ்டிக்கால் ‘ஐ லவ் யூ’ தற்கொலைக் குறிப்பு; தூக்கில் தொங்கிய கணவன், படுக்கையில் மனைவி சடலம்

சுவரில் லிப்ஸ்டிக்கால் ‘ஐ லவ் யூ’ தற்கொலைக் குறிப்பு; தூக்கில் தொங்கிய கணவன், படுக்கையில் மனைவி சடலம்

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள சரகண்டா பகுதியில் உள்ள வீட்டில் கணவன், மனைவி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையிலும், மனைவியின் உடல் படுக்கையிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்தில் துப்புரவு பணியாளர்களாக பணிபுரிந்த இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். மனைவி வேறொரு இளைஞருடன் பேசுவதாகவும், அதனால் தான் சாவதாகவும் கணவர் தனது தற்கொலைக் குறிப்பில் சுவரில் லிப்ஸ்டிக்கால் எழுதியுள்ளார்.

தற்கொலைக் குறிப்பில், மற்றொரு இளைஞரை தங்கள் மரணத்திற்கு காரணம் என்றும் கணவர் குறிப்பிட்டுள்ளார். மனைவியின் நடத்தையில் சந்தேகம்கொண்ட கணவர், அவரை கொலை செய்த பின் தானும் தற்கொற்றுக் கொண்டிருக்கலாம் என போலீஸ் சந்தேகம் தெரிவித்துள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே உண்மைக் காரணம் தெரியவரும். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் முழுமையாக விசாரித்து வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *