கான்பூரில் அதிர்ச்சி சம்பவம்: கட்டாய முத்த முயற்சியில் முன்னாள் காதலன் நாக்கை கடித்து துப்பிய காதலி!

கான்பூரில் அதிர்ச்சி சம்பவம்: கட்டாய முத்த முயற்சியில் முன்னாள் காதலன் நாக்கை கடித்து துப்பிய காதலி!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் திருமண நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு விலகிச் சென்ற முன்னாள் காதலியிடம், ஒரு இளைஞர் வலுக்கட்டாயமாக முத்தமிட முயன்றபோது, ஆத்திரமடைந்த அப்பெண் அவரது நாக்கை கடித்து துப்பிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. பில்ஹௌர் காவல் நிலையப் பகுதியில் உள்ள வயல்வெளியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. படுகாயமடைந்த அந்த இளைஞர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்தப் பெண்ணின் புகாரின் பேரில், இளைஞர் மீது ஐபிசி பிரிவுகள் 323, 504, 506 மற்றும் 354-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், காயமடைந்த இளைஞரின் குடும்பத்தினர், முன்பகை காரணமாக அவரது நாக்கை அப்பெண்ணின் சகோதரர்கள் கத்தியால் வெட்டியதாக குற்றம் சாட்டியுள்ளனர். இரு தரப்பிலிருந்தும் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்கை விசாரித்து வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *