பேங்காக்கில் துப்பாக்கிச்சூடு 6 பேர் பலி

பேங்காக்கில் துப்பாக்கிச்சூடு 6 பேர் பலி

தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் உள்ள சாதுசாக் மாவட்டத்தில், ஓர் டோர் கோர் சந்தையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் தாக்குதல் நடத்தியவர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். திங்கட்கிழமை காலை நடந்த இந்த சம்பவத்தில் ஒரு பெண் வியாபாரி மற்றும் நான்கு பாதுகாப்பு ஊழியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் காயமடைந்தனர். ஆரம்பகட்ட விசாரணையில், தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. தாக்குதல் நடத்தியவர் பின்னர் தற்கொலை செய்துகொண்டார்.

இந்த தாக்குதல் சந்தைப் பகுதியில், குறிப்பாக சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. தாக்குதல் நடத்தியவரின் அடையாளம் ஓரளவு தெரிந்தாலும், விசாரணை நலன் கருதி முழு விவரங்களும் வெளியிடப்படவில்லை. 2019-2020 ஆம் ஆண்டு வாக்கில் தனது கார் சேதமடைந்ததால், சந்தையின் பாதுகாப்பு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர் கோபமாக இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். கம்போடியாவுடனான போருக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *