5 மாநில தேர்தல்: 1,444 பார்வையாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!
February 6, 2026

தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, 1,444 மத்தியப் பார்வையாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் டெல்லியில் நிறைவடைந்தது. தேர்தல் சுமுகமாகவும் வெளிப்படையாகவும் நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அதிகாரிகளுக்குக் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பொது, காவல் மற்றும் செலவினப் பார்வையாளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் குறித்துப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கிடையில், அதிகாரிகளை விடுவிக்கக் கோரிய மாநிலங்களின் கோரிக்கையை நிராகரித்த ஆணையம், அனைத்து அதிகாரிகளும் தேர்தல் பணியில் ஈடுபடுவது கட்டாயம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.