35 ஆண்டுகளாக வயிற்றுக்குள் கல்லைப் போல் இருந்த குழந்தை, மூதாட்டிக்கு நேர்ந்த விசித்திரம்
February 4, 2026

செய்தி பிரிவு : ஒரு தாயின் வயிற்றுக்குள் 35 ஆண்டுகளாக இறந்த குழந்தை இருந்தது என்றால் யாராலும் நம்ப முடியாது. அல்ஜீரியாவைச் சேர்ந்த 73 வயது மூதாட்டி ஒருவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டபோது, மருத்துவர்கள் நடத்திய சோதனையில் 35 ஆண்டுகள் பழமையான 7 மாத கரு அவரது வயிற்றில் இருப்பது கண்டறியப்பட்டது. சுமார் 2 கிலோ எடை கொண்ட அந்த கரு ஒரு கல்லைப் போல மாறியிருந்தது.
மருத்துவ ரீதியாக இது ‘லித்தோபெடியன்’ (Lithopedion) என்று அழைக்கப்படுகிறது. கருப்பைக்கு வெளியே வளர முயற்சிக்கும் கரு, போதிய இரத்த ஓட்டம் இல்லாததால் காலப்போக்கில் கல்லாக மாறிவிடும். இவ்வளவு காலம் அந்த மூதாட்டிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உடலில் ஏற்படும் சிறிய வலிகளைக் கூட அலட்சியப்படுத்தக் கூடாது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு பாடமாகும்.