2026-லேயே தைவான் மீது போர்? ட்ரம்ப் ஆட்சியில் ஜின்பிங்கின் அதிரடி திட்டம்!

தைவானைக் கைப்பற்ற 2027-ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டிருந்த சீனா, தற்போது தனது திட்டத்தை 2026-லேயே செயல்படுத்தத் துடிப்பதாக உளவுத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் இடைக்காலத் தேர்தல்கள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் ட்ரம்ப் கொண்டுள்ள அதிருப்தியான சூழலைப் பயன்படுத்தி, இந்த ஆண்டே தாக்குதலைத் தொடங்க ஜின்பிங் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப்போர் நடந்தால் வெறும் வரைபடம் மட்டும் மாறாது; உங்கள் பாக்கெட்டையும் இது பதம் பார்க்கும். தைவான் மீதான தாக்குதலால் உலகளவில் மின்னணுப் பொருட்களின் விலை விண்ணைத் தொடும், விநியோகச் சங்கிலி முற்றிலுமாக முடங்கும். மேலும், இந்தியாவின் வர்த்தகப் பாதைகள் பாதிக்கப்படுவதோடு, தென்கிழக்கு ஆசியாவில் ஒரு மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியும் உருவாகும். மாஓ சேதுங்கிற்கு நிகரான அதிகாரத்தைப் பெறத் துடிக்கும் ஜின்பிங், ஆசியாவில் போரைத் தொடங்குவாரா என்ற அச்சத்தில் உலகம் உறைந்து போயுள்ளது.