131 ஆண்டுகளுக்கு முந்தைய ராஜ விருந்து: வைரலாகும் பரோடா மகாராஜாவின் மெனு கார்டு!

131 ஆண்டுகளுக்கு முந்தைய ராஜ விருந்து: வைரலாகும் பரோடா மகாராஜாவின் மெனு கார்டு!

சுமார் 131 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ராஜ குடும்பங்களின் இரவு உணவு எப்படி இருந்திருக்கும் என்று எப்போதாவது யோசித்ததுண்டா? தற்போது சமூக வலைதளங்களில் 1897-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு பிரம்மாண்ட ராஜ விருந்தின் மெனு கார்டு வைரலாகி வருகிறது.

குஜராத்தின் லட்சுமி விலாஸ் அரண்மனையில், பரோடா மகாராஜா, குவாலியர் மகாராஜாவிற்கு அளித்த இந்த விருந்தில் உலகத்தரம் வாய்ந்த உணவுகள் பரிமாறப்பட்டுள்ளன. இது வெறும் ஆச்சரியம் மட்டுமல்ல, நமது பாரம்பரியத்தின் ஒரு தனித்துவமான சான்றாகவும் பார்க்கப்படுகிறது.

ஆராய்ச்சியாளர் நேஹா வர்மணி பகிர்ந்துள்ள இந்தப் பட்டியலில் பிரெஞ்சு சமையல் முறையின் தாக்கம் இருப்பதை கண்டு நெட்டிசன்கள் வியந்து போயுள்ளனர். அந்த இரவு உணவில் பாதாம் கஸ்டர்ட், ட்ரஃபிள் கலந்த சிக்கன் கிரீம் சூப் முதல் இத்தாலிய பாணி மட்டன் கட்லெட் வரை அனைத்தும் இடம் பெற்றிருந்தன. இனிப்பு வகையாக பிஸ்தா ஐஸ்கிரீம் பரிமாறப்பட்டுள்ளது.

அக்கால இந்திய ஆட்சியாளர்கள் வெறும் உள்ளூர் சுவைகளுடன் மட்டும் நின்றுவிடாமல், சர்வதேச சமையல் கலைகளையும் மிகுந்த கண்ணியத்துடன் ஏற்றுக்கொண்டனர் என்பதற்கு இந்த ராஜ மெனு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *