புத்தாண்டு கொண்டாட்டத்தில் கொடூரம் காதலனின் அந்தரங்க உறுப்பை அறுத்த காதலி மும்பையில் பரபரப்பு
January 2, 2026

மும்பையின் சாந்தாகுரூஸ் பகுதியில் புத்தாண்டு தினத்தன்று கள்ளக்காதலனின் அந்தரங்க உறுப்பை ஒரு பெண் கத்தியால் அறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 44 வயதான நபருக்கும், அவரது உறவினரான 25 வயது பெண்ணுக்கும் இடையே 7 ஆண்டுகளாக தொடர்பு இருந்துள்ளது. தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண் வற்புறுத்தி வந்த நிலையில், அந்த நபர் பீகாருக்கு தப்பிச் சென்றும் தொல்லை குறையவில்லை என கூறப்படுகிறது.
டிசம்பர் 31 இரவு புத்தாண்டு இனிப்பு வழங்குவதாக கூறி அந்த நபர் வீட்டிற்கு வரவழைக்கப்பட்டுள்ளார். அப்போது அந்த பெண் காய்கறி வெட்டும் கத்தியால் அவரைத் தாக்கியுள்ளார். படுகாயமடைந்த அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள அந்தப் பெண்ணைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.