சுவாமி அவிமுக்தேஸ்வரானந்தரின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

சுவாமி அவிமுக்தேஸ்வரானந்தரின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

அலஹாபாத் உயர் நீதிமன்றம் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்தர் மற்றும் அவரது சீடர் முகுந்தானந்தருக்கு வழங்கிய முன்ஜாமீனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் அசுதோஷ் பிரம்மச்சாரி தாக்கல் செய்துள்ள இந்த மனுவில் உயர் நீதிமன்றம் சட்டபூர்வ ஆதாரங்களை புறக்கணித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனால் ஜோதிஷ் பீட சங்கராச்சாரியாருக்கு மீண்டும் கைது நடவடிக்கை பாயும் சூழல் உருவாகியுள்ளது.

மடத்திலிருந்த சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் இவர்கள் மீது பிரயாக்ராஜ் காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. கடந்த மார்ச் 25 அன்று உயர் நீதிமன்றம் இவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய நிலையில் தற்போது வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றால் சங்கராச்சாரியாரின் சட்டப்போராட்டம் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *