இன்றே வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள்! தவறினால் பெரும் அபராதம் நிச்சயம்!

இன்றே வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள்! தவறினால் பெரும் அபராதம் நிச்சயம்!

வருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள். அபராதம் இல்லாமல் தாக்கல் செய்ய செப்டம்பர் 15, 2025, இறுதித் தேதியாகும். இந்த தேதிக்கு பின் தாக்கல் செய்தால் வருமான வரிச் சட்டத்தின் கீழ் அபராதம் மற்றும் பிற சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். முன்னதாக, வரி செலுத்துவோரின் வசதிக்காக ஜூலை 31-லிருந்து செப்டம்பர் 15 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது, அது தற்போது முடிவடைய உள்ளது.

காலக்கெடுவைத் தவறவிட்டால், தாமதமாக தாக்கல் செய்வதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். வருமானம் ரூ. 5 லட்சத்திற்குள் இருந்தால் ரூ. 1,000 வரையும், அதற்கு மேல் இருந்தால் ரூ. 5,000 வரையும் அபராதம் விதிக்கப்படலாம். மேலும், நிலுவையில் உள்ள வரிக்கு மாதம் 1% எளிய வட்டி செலுத்த வேண்டும். உரிய நேரத்தில் தாக்கல் செய்யத் தவறினால், சில நன்மைகளை இழக்க நேரிடலாம், மேலும், ரீஃபண்ட் பெறுவதிலும் தாமதம் ஏற்படலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *