நிச்சயதார்த்தம் செய்தவர் எங்கே என மேடையில் மணப்பெண் எழுப்பிய கேள்வியால் பெரும் பரபரப்பு
February 9, 2026

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் திருமண மேடையில் மணமகன் தள்ளாடியதை கண்ட மணப்பெண், அவர் ஒரு மாற்றுத்திறனாளி என்றும் தனக்குக் காட்டப்பட்ட நபர் இவர் இல்லை என்றும் கூறி திருமணத்தை நிறுத்தினார். மணமகன் வீட்டார் சமாதானம் செய்ய முயன்றும், ஏமாற்றத்தை ஏற்க மறுத்த பெண் வீட்டார் புகாரளித்ததால் மணமகன் தரப்பினர் அதிர்ச்சியுடன் வீடு திரும்பினர்.
நிச்சயிக்கப்பட்ட நபருக்குப் பதில் வேறொருவரை மணமகனாக அழைத்து வந்ததாகக் கூறி எழுந்த இந்த மோதலால் திருமண மண்டபமே போர்க்களமானது. உணவருந்திய பின் சடங்குகள் தொடங்கும் வேளையில் வெளிச்சத்திற்கு வந்த இந்த நூதன ஆள்மாறாட்ட மோசடி குறித்துப் பகுதி முழுவதும் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.