அம்பயரை குறிவைத்த த்ரோ! ஹாரிஸின் வீச்சில் தலையில் காயம், நடுவர் களத்திலிருந்து வெளியேற்றம்

அம்பயரை குறிவைத்த த்ரோ! ஹாரிஸின் வீச்சில் தலையில் காயம், நடுவர் களத்திலிருந்து வெளியேற்றம்

பாகிஸ்தான் மற்றும் யுஏஇ இடையேயான கிரிக்கெட் போட்டியின்போது எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ஹாரிஸ் வீசிய பந்து நேரடியாக நடுவர் ருசிரா பல்லியகுருஜின் தலையில் பலமாக தாக்கியது. அவருக்கு ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக, ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது, மேலும் அவர் உடனடியாக களத்திலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நான்காவது நடுவரான காஜி சோஹைல் அவரது இடத்தைப் பிடித்தார். பாகிஸ்தான் வீரர்கள் உடனடியாக நடுவரிடம் சென்று அவரது நிலையை விசாரித்தனர். இந்த நிகழ்வு கிரிக்கெட் உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது, மேலும் வர்ணனையாளர் வாசிம் அக்ரமின் நகைச்சுவை சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனத்தை பெற்றுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *