அரிசி, பருப்பில் பூச்சிகள் தொல்லையா? சமையலறைக்கு இந்த எளிய வழிகள் போதும்

அரிசி, பருப்பில் பூச்சிகள் தொல்லையா? சமையலறைக்கு இந்த எளிய வழிகள் போதும்

அரிசி மற்றும் பருப்பு வகைகளில் பூச்சிகள் வருவது பொதுவான பிரச்சனை, குறிப்பாக மழைக்காலத்தில் இது அதிகரிக்கும். சரியாக சேமிக்கப்படாவிட்டால், தானியங்கள் மற்றும் மசாலாப் பொருட்களில் பூச்சிகள் மற்றும் பூஞ்சைகள் தோன்ற வாய்ப்புள்ளது. இந்தப் பிரச்சனையிலிருந்து விடுபடவும், உணவுப் பொருட்களை நீண்ட நாள் பாதுகாக்கவும சில எளிய உத்திகளைப் பின்பற்றலாம்.

அரிசி அல்லது பருப்புப் பாத்திரத்தில் சில காய்ந்த மிளகாயை வைப்பதன் மூலம் அதன் காரத்தன்மை பூச்சிகளை விரட்டும். மேலும், வேப்பங்குச்சி அல்லது சில பிரியாணிலைகளை சேர்ப்பதன் மூலமும் பூச்சிகளின் தொல்லையை பெருமளவு குறைக்கலாம். இந்த இயற்கையான முறைகளைப் பயன்படுத்தி, உங்கள் சேமிக்கப்பட்ட உணவுப் பொருட்களைப் பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பாகவும், புதியதாகவும் வைத்திருக்கலாம். Sources

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *