இந்திய கணவர் வேண்டும்; டைம்ஸ் ஸ்கொயரில் வைரலான அமெரிக்க பெண்ணின் அறிவிப்பு

நியூயார்க்கின் டைம்ஸ் ஸ்கொயரில் அமெரிக்கப் பெண் ஒருவர் கையில் வைத்திருந்த பதாகை இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில், “இந்திய கணவரைத் தேடுகிறேன்” என்று எழுதப்பட்டிருந்தது. டேட்டிங் செயலிகள் நிறைந்த இந்த காலகட்டத்தில், துணையைத் தேடும் அவரது பாரம்பரிய அணுகுமுறை நெட்டிசன்களைக் கவர்ந்துள்ளது. அந்தப் பெண்ணின் வீடியோ வேகமாகப் பரவியது, பொதுமக்கள் மற்றும் சூப்பர் ஹீரோ உடையில் இருந்தவர்கள்கூட ஆச்சரியத்துடன் புகைப்படம் எடுக்க முன்வந்தனர்.
அந்தப் பெண்ணின் அடையாளம் தெரியவில்லை என்றாலும், அவரது இந்தச் செயல் சமூக வலைத்தளங்களில் விவாதத்தைத் தூண்டியுள்ளது. இந்திய ஆண்களின் குடும்பப் பாரம்பரிய பண்புகள் இதற்கு காரணமாக இருக்கலாம் என சிலர் கருத்து தெரிவிக்க, இன்னும் சிலர் பாலிவுட் மற்றும் இந்திய கலாச்சாரத்தின் செல்வாக்கைக் குறிப்பிடுகின்றனர். இந்தப் பதிவுக்கு ஆயிரக்கணக்கான பதில்கள் குவிந்தன, பலர் வேடிக்கையாக தங்கள் தகுதிகளைப் பட்டியலிட்டனர். இது ஒரு சமூக பரிசோதனையா அல்லது உண்மையான காதலைத் தேடும் முயற்சியாக இருக்கலாம் என இணையத்தில் விவாதம் நடந்துவருகிறது.