வெற்று அறிவிப்புகள் மூலம் மக்களை ஏமாற்ற முடியாது என திமுக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்
March 27, 2026

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அளித்த 505 வாக்குறுதிகளில் வெறும் 13 சதவீதத்தை மட்டுமே நிறைவேற்றிவிட்டு, 100 சதவீத பணிகளையும் முடித்துவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் பொய் பரப்புரை செய்வதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். வெறும் 66 வாக்குறுதிகள் மட்டுமே அரைகுறையாக நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், 373 வாக்குறுதிகள் இன்னும் அப்படியே உள்ளதாக அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவிலேயே மிகவும் மோசடியான கட்சி திமுக தான் என்று சாடியுள்ள அவர், இந்தத் தேர்தலுக்குப் புதிய தேர்தல் அறிக்கை தேவையில்லை என்றும் கூறியுள்ளார். நிறைவேற்றப்படாத பழைய வாக்குறுதிகளையே வரும் தேர்தலுக்கான அறிக்கையாக வெளியிடலாம் என அவர் கிண்டலாகத் தெரிவித்துள்ளார். தமிழக மக்களிடம் திமுகவின் இந்த பொய் முகம் அம்பலமாகிவிட்டதாக அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.