விருப்பப்பட்ட 8 தொகுதிகள் ஒதுக்கீடு மகிழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன்

திமுக கூட்டணியில் விசிக போட்டியிடும் 8 தொகுதிகள் எவை என்பது சுமூகமாக முடிவானதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை அறிவாலயத்தில் பேசிய அவர், தங்களுக்கு விருப்பமான தொகுதிகளே கிடைத்துள்ளதாகவும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்றும் கூறினார். கூட்டணியில் குழப்பம் ஏற்படும் என காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைவார்கள் என அவர் உறுதிபட தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் பானை சின்னத்தை ஒதுக்காத காரணத்தால், புதுச்சேரியில் மட்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும் என்று அவர் விளக்கமளித்தார். இதற்காக ஏற்கனவே கடிதம் அனுப்பியும் சாதகமான முடிவு கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டார். தற்போது தொகுதி பங்கீடு நிறைவடைந்த நிலையில் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த உள்ளதாக அவர் கூறினார்.