மார்ச் 29 அன்று 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிக்கிறார் விஜய்
March 27, 2026

தேர்தல் ஆணையத்தின் அனுமதி மற்றும் தொழில்நுட்பக் காரணங்களால் இன்று நடைபெறவிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் 110 வேட்பாளர்களை அறிமுகம் செய்யத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், விதிமுறைச் சிக்கல்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கட்சித் தலைமை தெரிவித்துள்ளது.
இந்தக் கூட்டம் வரும் மார்ச் 29-ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. அன்று தமிழகத்தின் 234 தொகுதிகளுக்குமான அனைத்து வேட்பாளர்களையும் விஜய் ஒரே மேடையில் அறிமுகப்படுத்துகிறார். அத்துடன் கட்சியின் தேர்தல் அறிக்கை மற்றும் முக்கியப் பிரச்சார வியூகங்களையும் அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.