தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதும் 5 மாநிலங்களில் அமலுக்கு வரும் கிடுக்கிப்பிடி கட்டுப்பாடுகள்

தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதும் 5 மாநிலங்களில் அமலுக்கு வரும் கிடுக்கிப்பிடி கட்டுப்பாடுகள்

தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அந்த நொடியே நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வரும். இதன் மூலம் புதிய திட்டங்களை அறிவிக்கவோ, அடிக்கல் நாட்டவோ தமிழக அரசுக்குத் தடை விதிக்கப்படும். மேலும், வாக்காளர்களுக்குப் பணம் அல்லது பரிசுப் பொருட்கள் விநியோகிப்பதைத் தடுக்கக் கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தேர்தல் முடியும் வரை அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்யக்கூடாது மற்றும் அரசு வாகனங்களை ஊர்வலங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது. சாதி, மத ரீதியாகப் பேசுவதோ அல்லது தனிநபர் விமர்சனங்களில் ஈடுபடுவதோ தகுதி நீக்கத்திற்கு வழிவகுக்கும். பொது மக்கள் உரிய ஆவணங்களின்றி அதிகப்படியான ரொக்கப் பணத்தைக் கொண்டு செல்வதைத் தவிர்க்குமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *