திமுக வேட்பாளர் பட்டியலில் இடம்பெறப் போவது யார் ஸ்டாலின் நடத்தும் அதிரடி நேர்காணல்
March 15, 2026

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் வரும் மார்ச் 17-ஆம் தேதி தொடங்குகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்தக் குழுவினர் வேட்பாளர்களை நேரில் சந்தித்து ஆலோசிக்க உள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
கட்சியில் போட்டியிட 15,000-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ள நிலையில் இந்த நேர்காணல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. தகுதியான வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் திமுக தலைமை தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளது.