தமிழக அரசியல் களத்தில் அதிரடி மாற்றம் மற்றும் 234 தொகுதிகளின் தவெக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

தமிழக அரசியல் களத்தில் அதிரடி மாற்றம் மற்றும் 234 தொகுதிகளின் தவெக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் வரும் மார்ச் 29-ஆம் தேதி காலை 11 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று, மொத்தம் 264 தொகுதிகளுக்கான வெற்றி வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைக்க உள்ளார்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளைப் பின்பற்றி நடைபெறும் இந்த உள்அரங்க நிகழ்வில், விசில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றிக்காகத் தொண்டர்கள் உழைக்க வேண்டும் எனப் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் கேட்டுக்கொண்டுள்ளார். இதில் தலைமை நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *