உலக அரங்கில் இந்தியாவின் நற்பெயரை ராகுல் காந்தி கெடுக்கிறார் என்று அமித் ஷா சாடல்

உலக அரங்கில் இந்தியாவின் நற்பெயரை ராகுல் காந்தி கெடுக்கிறார் என்று அமித் ஷா சாடல்

டெல்லியில் நடைபெற்ற சர்வதேச செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் இளைஞர் காங்கிரஸார் அரை நிர்வாண போராட்டம் நடத்தியதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடுமையாக விமர்சித்துள்ளார். பிரதமர் மோடியை எதிர்ப்பதாக நினைத்துக்கொண்டு ராகுல் காந்தி சர்வதேச நாடுகளின் முன்னிலையில் இந்தியாவை இழிவுபடுத்துகிறார் என்று அவர் அசாமில் நடைபெற்ற விழாவில் பேசினார்.

இந்த போராட்டத்தை நடத்தியவர்களை சிங்க இதயம் கொண்டவர்கள் என்று ராகுல் பாராட்டியது அவரது பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது என அமித் ஷா குறிப்பிட்டார். அரசியல் ரீதியாக பாஜகவை எதிர்க்க உரிமை உண்டு என்றாலும், நாட்டின் வளர்ச்சியை உலகமே கவனிக்கும் வேளையில் இதுபோன்ற செயல்கள் தேசத்திற்கு அவப்பெயரைத் தேடித்தரும் என்றும் அவர் எச்சரித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *