ஈரான் மீதான தாக்குதலை 10 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக டிரம்ப் அதிரடி அறிவிப்பு

ஈரான் விடுத்த கோரிக்கையை ஏற்று அந்நாட்டின் எரிசக்தி மையங்கள் மீதான தாக்குதலை மேலும் ஐந்து நாட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒத்திவைத்துள்ளார். இதன்படி ஏப்ரல் 6ஆம் தேதி இரவு 8 மணி வரை போர்நிறுத்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அமைதி பேச்சுவார்த்தை சரியான திசையில் செல்வதாகவும், ஊடகங்கள் இது குறித்து தவறான செய்திகளைப் பரப்புவதாகவும் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் 15 நிபந்தனைகளை ஏற்பது குறித்து ஈரான் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. இருப்பினும், ஏவுகணைத் திட்டம் மற்றும் யுரேனியம் செறிவூட்டலைக் குறைக்க ஈரான் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த பிப்ரவரி 28 முதல் இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் இந்த மோதலில் ஈரானில் இதுவரை 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.