இறுதிப்போட்டியில் ஆல்ரவுண்டராக மிரட்டிய அபிஷேக் சர்மா அதிரடியால் கோப்பையை வென்றது இந்தியா

இறுதிப்போட்டியில் ஆல்ரவுண்டராக மிரட்டிய அபிஷேக் சர்மா அதிரடியால் கோப்பையை வென்றது இந்தியா

நடப்பு உலகக்கோப்பை தொடர் முழுவதும் தடுமாறி வந்த அபிஷேக் சர்மா, இறுதிப்போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடினார். சிக்சர் மழை பொழிந்து தொடரின் அதிவேக அரைசதத்தை விளாசி புதிய சாதனை படைத்தார். இவரது அதிரடி ஆட்டம் இந்திய அணி இமாலய இலக்கை எட்ட முக்கிய காரணமாக அமைந்தது.

பேட்டிங்கில் மிரட்டிய அபிஷேக், பந்துவீச்சிலும் அசத்தினார். நியூசிலாந்து அணியின் கடைசி விக்கெட்டை வீழ்த்தி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். முக்கியமான ஆட்டத்தில் அபாரமான ஆல்ரவுண்ட் திறமையை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா, தற்போது இந்திய அணியின் வெற்றி நாயகனாக கொண்டாடப்படுகிறார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *