இந்தியாவில் எரிசக்தி லாக்டவுன் வருமா என்பது குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

இந்தியாவில் எரிசக்தி லாக்டவுன் வருமா என்பது குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

அரபு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற வதந்திகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவிற்கு எந்தக் தட்டுப்பாடும் இருக்காது என்றும், சர்வதேச சூழலைக் காரணம் காட்டி விலையேற்றம் செய்யப்படாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார். லாக்டவுன் தொடர்பான செய்திகள் முற்றிலும் அடிப்படையற்றவை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

பிரதமர் மோடியின் அவசரக் கூட்டத்திற்குப் பிறகு, விமான எரிபொருள் உட்பட அனைத்து எரிபொருட்களின் விநியோகமும் தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காக பரப்பப்படும் லாக்டவுன் அச்சத்தை மக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட அமைச்சர், கொரோனா காலத்தைப் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது என்றார். மத்திய அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *