ஆரோக்கியமாக வாழ வீட்டில் உள்ள இந்த பொருட்களை உடனே மாற்றுங்கள்

செய்தி பிரிவு : நாம் அன்றாடம் பயன்படுத்தும் சாதாரண பொருட்கள் நமக்கே தெரியாமல் நோய்களை உண்டாக்கும் கிருமிகளின் கூடாரமாக மாறக்கூடும். வீட்டின் அழகை விட, நாம் பயன்படுத்தும் பொருட்களின் தூய்மைதான் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம். குறிப்பாக, ஐஸ் கியூப் டிரே மற்றும் குளியல் துண்டுகளை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றுவது அவசியம். நீண்ட நாள் பயன்பாட்டினால் இவற்றில் சேரும் கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாக்கள் சாதாரண கிருமிநாசினிகளால் அழியாது, இது உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும்.
அதேபோல் படுக்கை விரிப்புகள், சந்தைப்பைகள் மற்றும் காலணிகளையும் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்ற வேண்டும். வியர்வை மற்றும் இறந்த செல்கள் சேரும் படுக்கை விரிப்புகளை மூன்று ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தக்கூடாது. காய்கறி மற்றும் இறைச்சி வாங்கும் பைகள் மற்றும் வியர்வை படிந்த காலணிகளை ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றுவது தொற்று நோய்களிலிருந்து உங்களைக் காக்கும். இந்த எளிய மாற்றங்கள் உங்கள் குடும்பத்தின் நீண்ட கால ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும்.