ஆசிய கோப்பையில் பும்ராவுக்கு வாய்ப்பே இல்லை, பாகிஸ்தான் நட்சத்திரம் ‘0’ ரன்னில் அவுட்!
September 15, 2025

ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு துவக்கத்திலேயே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அணியின் இளம் வீரர் சாம் அயூப், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஹர்திக் பாண்டியா வீசிய முதல் பந்திலேயே கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியாவின் பந்து, அயூப்பின் பேட்டில் பட்டு, நேராக ஸ்லிப்பில் நின்றிருந்த பும்ராவின் கைகளில் தஞ்சம் புகுந்தது.
சர்வதேச டி20 போட்டிகளில் தொடர்ந்து இரண்டாவது முறையாக டக் அவுட்டாகி மோசமான சாதனையை படைத்தார் சாம் அயூப். இதற்கு முன்பு ஓமனுக்கு எதிரான போட்டியிலும் அவர் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். பாகிஸ்தானின் வருங்கால நட்சத்திரமாக பார்க்கப்பட்ட அயூப்பின் இந்த மோசமான செயல்பாடு அணிக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.