வாக்குச்சாவடிகளில் மொபைல் போன் வைக்க சிறப்பு வசதி தேர்தல் ஆணையம் அதிரடி

வாக்குச்சாவடிகளில் மொபைல் போன் வைக்க சிறப்பு வசதி தேர்தல் ஆணையம் அதிரடி

வாக்குச்சாவடிக்குள் மொபைல் போன்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வாக்காளர்களின் வசதிக்காக அவற்றை பாதுகாப்பாக ஒப்படைக்க தனி வசதி செய்யப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர்கள் தங்களது போன்களை வெளியே கொடுத்துவிட்டு, வாக்களித்த பிறகு மீண்டும் பெற்றுக்கொள்ளலாம் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. மேலும், வாக்காளர்கள் வேட்பாளர்களை எளிதாக அடையாளம் காணும் வகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்கள் மற்றும் பெரிய அளவிலான எழுத்துக்கள் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *