துபாயின் பாதுகாப்புக்கு ஒரு புதிய சோதனை! 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பையை ஒரு பெண்மணி விட்டுச்சென்றபோது நடந்த ஆச்சரியம்

துபாயின் பாதுகாப்புக்கு ஒரு புதிய சோதனை! 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பையை ஒரு பெண்மணி விட்டுச்சென்றபோது நடந்த ஆச்சரியம்

துபாய் உலகின் மிகவும் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது, அங்கு குற்றங்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. சமீபத்தில், அலிஷா ஹமிரானி என்ற துபாயில் வசிக்கும் பெண், இந்த பாதுகாப்பைச் சோதிக்க ஒரு புதுமையான முயற்சியை மேற்கொண்டார். அவர் துபாயின் மக்கள் நடமாட்டம் மிகுந்த ‘கோல்ட் சூக்’ (Gold Souk) பகுதியில் உள்ள ஒரு இருக்கையில் சுமார் 1 லட்சம் திர்ஹாம் (இந்திய மதிப்பில் 22 லட்சம் ரூபாய்க்கு மேல்) மதிப்புள்ள தனது விலையுயர்ந்த ‘ஹெர்ம்ஸ் பிட்கின்’ பையை வைத்துவிட்டு, அப்ரா (தண்ணீர் டாக்ஸி) மூலம் வேறு பகுதிக்குச் சென்றார்.

சிறிது நேரம் கழித்து அலிஷா திரும்பி வந்தபோது, ஒரு வியப்பான காட்சி காத்திருந்தது. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள அந்தப் பை அதே இடத்தில் பாதுகாப்பாக இருந்தது – யாரும் அதைத் தொடக்கூட இல்லை. இந்த சம்பவத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (@bikergirldubai) ஒரு வீடியோவாகப் பகிர்ந்துள்ளார், அது உடனடியாக வைரலானது. துபாயின் கடுமையான சட்டங்கள், நேர்மையான சூழல் மற்றும் வலுவான பாதுகாப்பு அமைப்புகள் காரணமாகவே இது சாத்தியமானது என்று அவர் கூறினார்.

View this post on Instagram

A post shared by Alisha Hamirani (@bikergirldubai)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *