இந்தியா-நேபாள எல்லையில் ரூ.1000 கோடி நில மோசடி அம்பலம்

இந்தியா-நேபாள எல்லையில் ரூ.1000 கோடி நில மோசடி அம்பலம்

இந்தியா-நேபாள எல்லையில் உள்ள உத்தரப் பிரதேசத்தின் பிலிபிட் மற்றும் லக்கிம்பூர் கேரி மாவட்டங்களில் போலியான பான் கார்டுகளைப் பயன்படுத்தி சுமார் ரூ.1000 கோடி மதிப்புள்ள நிலம் விற்பனை செய்யப்பட்ட திடுக்கிடும் மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வருமான வரித்துறையின் விசாரணையில் இதுவரை 240 நிலப் பதிவு ஆவணங்களில் போலியான பான் கார்டுகள் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இது கறுப்புப் பண பரிவர்த்தனைகள் குறித்த தீவிர சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய தனிநபர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வருமான வரித்துறை தயாராகி வருகிறது.

இந்த மோசடி குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், பிலிபிட் மற்றும் லக்கிம்பூர் கேரி மாவட்டங்களில் உள்ள துணைப் பதிவாளர் அலுவலகங்களிலிருந்து 402 பதிவு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த ஆவணங்களின் ஆய்வில், பிலிபிட்டில் 190க்கும் மேற்பட்ட பதிவுகளிலும், லக்கிம்பூர் கேரியில் 50க்கும் மேற்பட்ட பதிவுகளிலும் போலியான பான் கார்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்தது. இதில் பிலிபிட் புலிகள் காப்பகத்திற்கு அருகிலுள்ள ஒரு ரிசார்ட்டிற்கான நிலமும் அடங்கும். வருமான வரித்துறை இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறது. துணைப் பதிவாளர் அலுவலகத்தைச் சேர்ந்த சில ஊழியர்களும் இந்த பெரிய மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *