கொடிய முதலையை முத்தமிட்ட மனிதர்! வைரலாகும் திகிலூட்டும் வீடியோ

கொடிய முதலையை முத்தமிட்ட மனிதர்! வைரலாகும் திகிலூட்டும் வீடியோ

அமெரிக்காவின் லூசியானாவில் ஒரு நபர், முதலை ஒன்றை முத்தமிடும் திகிலூட்டும் காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆற்றில் இருந்து வெளிவந்த முதலையின் பலம் வாய்ந்த தாடையை அந்த நபர் தைரியமாக தனது கைகளால் பிடித்து, அதன் முகத்தில் முத்தமிடுகிறார். வழக்கமாக ஆக்ரோஷமாக இருக்கும் முதலை, அவரைத் தாக்காமல் அமைதியாக ஏற்றுக்கொள்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

View this post on Instagram

A post shared by Dannie nini (@cajundan2)

முத்தமிட்ட பிறகு, அந்த நபர் முதலைக்கு ஒரு மார்ஷ்மெல்லோவை உணவாகக் கொடுக்கிறார், அதை ஏற்றுக் கொண்ட முதலை பிறகு மீண்டும் ஆற்றுக்குள் செல்கிறது. @cajundan2 என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த காணொலி மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த வீடியோவை கண்ட பயனர்கள் அதிர்ச்சி அடைந்ததோடு பல்வேறு கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *