2027-ல் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை துவக்கம்; காத்திருக்கும் பயணிகளுக்கு ஒரு முக்கிய செய்தி

2027-ல் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை துவக்கம்; காத்திருக்கும் பயணிகளுக்கு ஒரு முக்கிய செய்தி

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை ஆகஸ்ட் 2027-ல் தொடங்கும் என ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மும்பை மற்றும் அகமதாபாத் இடையே இயக்கப்படும் இந்த ரயிலின் முதல் 50 கி.மீ. பிரிவு சூரத் பகுதியில் தொடங்கப்படும் என்று அவர் கூறினார். இத்திட்டத்தின் கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்த ரயில் சேவை துவங்கியதும், மும்பை மற்றும் அகமதாபாத் இடையேயான பயண நேரம் வெறும் 2 மணி நேரமாக குறையும். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா வளாகத்தில் 106 அடி ஆழத்தில் ஒரு நிலத்தடி நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதில் ஆறு நடைமேடைகள் இருக்கும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *