15 வயதில் கோடீஸ்வரரான வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணியில் களமிறங்க தயார்

15 வயதில் கோடீஸ்வரரான வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணியில் களமிறங்க தயார்

பீகாரைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 15 வயதை எட்டியுள்ளதால், சர்வதேச போட்டிகளில் விளையாடும் தகுதியைப் பெற்றுள்ளார். ஐசிசி விதிகளின்படி குறைந்தபட்ச வயது வரம்பை அவர் நிறைவு செய்துள்ளதால், இந்திய சீனியர் அணியில் இணைவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்ட இவர், ஏற்கனவே தனது அதிரடி ஆட்டத்தால் அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.

விளையாட்டு மட்டுமின்றி வருமானத்திலும் வைபவ் சாதனை படைத்துள்ளார். ஐபிஎல் ஒப்பந்தம், விளம்பரங்கள் மற்றும் உள்நாட்டு போட்டிகள் மூலம் 15 வயதிலேயே அவரது சொத்து மதிப்பு 2.5 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. இளம் வயதிலேயே கோடீஸ்வரராக மாறியுள்ள இவர், சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட்டின் அடுத்த நட்சத்திரமாக வைபவ் உருவெடுத்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *