10 ஆண்டுகளுக்குப் பிறகு ‘சாது’ வேடத்தில் வந்த கணவர், மனைவியை சுத்தியலால் அடித்துக்கொலை

10 ஆண்டுகளுக்குப் பிறகு ‘சாது’ வேடத்தில் வந்த கணவர், மனைவியை சுத்தியலால் அடித்துக்கொலை

10 ஆண்டுகள் பிரிந்திருந்த நிலையில், ‘சாது’ வேடத்தில் டெல்லிக்குத் திரும்பிய கணவர், மனைவியை சுத்தியலால் அடித்துக் கொன்றதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு டெல்லியில் உள்ள நேப் சராய் பகுதியில் இந்த பயங்கரமான சம்பவம் நடந்துள்ளது. பீகாரின் முங்கர் மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயதான பிரமோத் குமார் ஜா என்பவர், புதன்கிழமை அதிகாலை தனது 50 வயது மனைவி கிரண் ஜாவை சுத்தியலால் தாக்கி கொலை செய்துள்ளார். குடும்பத் தகராறு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக கிரண் தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ஆகஸ்ட் 1-ம் தேதி பீகாரில் இருந்து டெல்லிக்கு வந்த பிரமோத், குடும்பத்தினரை ஏமாற்ற இந்த வேடத்தை பயன்படுத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கிரணின் மருமகள் அவரை ரத்த வெள்ளத்தில் கண்டபோது இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302-ன் கீழ் பிரமோத் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் டெல்லி முதல் பீகார் வரை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *