ஹிஸ்புல்லாவின் பீரங்கி எதிர்ப்பு படை தளபதி முகமது பஷீர் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டார்

இஸ்ரேல் பாதுகாப்புப் படை நடத்திய அதிரடித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி ஹசன் முகமது பஷீர் கொல்லப்பட்டார். இவர் அந்த அமைப்பின் பீரங்கி எதிர்ப்புப் பிரிவின் தலைவராகச் செயல்பட்டு வந்தார். தெற்கு லெபனானில் உள்ள லிதானி ஆற்றின் வடக்குப் பகுதியில் இஸ்ரேலிய குடிமக்களுக்கு எதிராக நூற்றுக்கணக்கான தாக்குதல்களைத் திட்டமிட்டுக் கொடுத்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மறுபுறம் ஈரான் கடற்படைத் தளபதி அலி ரேசா தாங்சிரியையும் இஸ்ரேலிய விமானப்படை வெற்றிகரமாக வீழ்த்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த இவர் கொல்லப்பட்டது ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா தரப்பிற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. பயங்கரவாத அமைப்புகளின் இலக்குகள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தீவிரத் தாக்குதல்களை நடத்தும் என பிரதமர் நெதன்யாகு உறுதிபடத் தெரிவித்துள்ளார்.